My Account Login

அமெரிக்காவில் நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் தேர்தல் - மே 5ம் திகதி

நடக்கவிருக்கும் நான்காவது பாராளுமன்றத்தேர்தல் மூலம் 12 நாடுகளிலிருந்து 115 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட இருக்கிறார்கள்- - அமெரிக்காவில் 10 உறுப்பினர்கள்.

NEW JERSEY, USA, April 6, 2024 /EINPresswire.com/ --

முள்ளிவாய்கால் இனப்படுகொலைக்கு பின்பு தமிழர்களின் குரலை வெளிப்படுத்துவதற்காக 2010 ஆண்டு மே மாதம் 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காம் தவணைக்கான பொதுத்தேர்தல் மே 5ம் திகதி உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் 115 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கு பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. அமெரிக்காவில் 10 உறுப்பினர்கள்.

தமிழீழ மக்களின் நீதிக்கும்இஇறையாண்மைக்குமாக ஜனநாயக வழியில் நேர்கொண்டகொள்கையுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்போராடிவருகின்றது என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக் காலத்துக்கான வேட்புமனுதாக்கல் மார்ச் 15 ஆம் நாளன்று தொடங்கி எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி நள்ளிரவு வரை வேட்பு மனுதாக்கல் ஏற்றுக் கொள்ளப்படும் என நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் அமெரிக்க தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது. எதிர்வரும் மே 05, 2024 அன்று பொதுத் தேர்தல்இடம்பெறவுள்ளது.

* அமெரிக்கா நாட்டினை ஒன்பது தேர்தல் மாநிலங்களாக பிரிக்கப்பட்டு அவற்றிலிருந்து 10 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவார்கள். அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்கள் செறிவைப் பொறுத்து, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த மாநிலங்கள்பிரிக்கப்பட்டுள்ளன.

அவை பின்வருமாறு:

1.​California North - 1 பிரதிநிதி

2.​California – 1 பிரதிநிதி

3.​Massachusetts – 1 பிரதிநிதி

4.​Mid-west – 1 பிரதிநிதி

5.​New Jersey – 2 பிரதிநிதிகள்

6.​New York – 1 பிரதிநிதி

7.​Pennsylvania – 1 பிரதிநிதி

8.​Texas -– 1 பிரதிநிதி

9.​National List – 1 பிரதிநிதி

தேர்தல் நடைமுறை விதிகள், வேட்புமனுக்கள் மற்றும் இதரவிடயங்கள் அமெரிக்க தேர்தல் ஆணையாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி,
வை. ராஜேஸ்வரன்
தேர்தல் ஆணையாளர் - USA

Email: varajes@yahoo.com

மேலதிக விவரங்களுக்கு :
www.tgte-us.org / www.tgte.org

வை. ராஜேஸ்வரன்
தேர்தல் ஆணையாளர் - USA
varajes@yahoo.com
Visit us on social media:
Facebook
Twitter

View full experience

Distribution channels: Human Rights, International Organizations, Media, Advertising & PR, Politics, World & Regional